
பாவம் பறவைகள்
இலையுதிர்க்கும்
நிழலைத் தொலைக்கும்
மீண்டும் துளிர்த்து
கூடுகள் சுமந்து
கண்ணசைக்கும்
காடுகள் அழித்தபின்
எப்படி நிகழும்
ஒரு பறவையின் வாழ்க்கை.
நல்ல நாடு
பாருக்குள்ளே
நல்ல நாடு
பதினாறு வயதும் ’பாருக்குள்ளே’.
யாழ்ப்பாணம்
குழலினிதுதான்
’யாழ்’ இனிதென்று
யார் சொன்னது?
No comments:
Post a Comment