Wednesday, June 23, 2010

ஊமையர்களின் கதையாடல்




ஒரு கவிதையின்
பகிர்ந்தளிப்பைப் போலும்
அவர்களது கதையாடல்

செவிசாய்த்து
உன்னிப்பாய் கிரகிக்கும் பாவணை
தேர்ந்த சொல்லாடலின் சுவராஸ்யத்தை
உட்செலுத்தும் புத்துயிர்ப்பி

கடந்து சென்ற பள்ளிக்கூடம்
பேருந்துப்பார்வையில் புள்ளியான பின்பும்
கண்களில் விரிந்திருந்தது
அதில் கழித்த காலம்

நிரம்பி வழிந்த சம்பாஷணையில்
நாவின் தீயொலியற்ற
விரல் மொழியால்
ஊமையனாய் நானும்
கதைப்பவர்களாய் அவர்களும்

பேருந்து இரைச்சலோடு தனது இலக்கு நோக்கி
என்னை செவிடாக்கியபடி

-சு.மு.அகமது

No comments:

Post a Comment